மைக்ரோசொஃப்ட் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை..!
2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குழுக்களை, ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் இரகசியமாக கண்காணித்து வருவதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது, ஜனநாயக கட்சியின் பிரசாரத்தை இலக்கு வைத்த ரஷ்ய ஹேக்கர்கள், மீண்டும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தலை இலக்காகக்கொண்டு, வெளிநாட்டு குழுக்கள் தங்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றமை தெளிவாகிறது என்றும் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.