மீண்டும் அட்டகாசம் - செயலிகளை அதரிடியாக நீக்கிய கூகுள்

கூகுள் நிறுவனம் மால்வேர் கண்டறியப்பட்ட செயலிகளை தனது பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் மால்வேர் அடங்கிய ஆறு செயலிகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பிளே ஸ்டோரில் இருந்து அவை உடனடியாக நீக்கப்பட்டு உள்ளது. ஜோக்கர் என அழைக்கப்படும் இந்த மால்வேர் ஏற்கனவே ஜூலை மாத வாக்கில் 11 செயலிகளில் கண்டறியப்பட்டது

தற்சமயம் ஆறு செயலிகளில் இந்த மால்வேர் இருப்பதாக பிரேடியோ எனும் சைபர்செக்யூரிட்டி ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்து கூகுளுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறது. மால்வேர் கண்டறியப்பட்ட செயலிகள் பிளே ஸ்டோரில் சுமார் 2 லட்சம் டவுன்லோட்களை பெற்று இருந்தன.

ஜோக்கர் என்ற மால்வேர் பிலீஸ்வேர் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இது தீங்கு விளைவிக்கும் பாட் ஆகும். இந்த மால்வேர் மொபைல்களில் தேவையற்ற க்ளிக்களை மேற்கொண்டு கட்டணம் வசூலிக்கும் பிரீமியம் சேவைகளில் சேர்க்கும் தன்மை கொண்டது.

 

சேஃப்டி ஆப்லாக், கன்வீனியன்ட் ஸ்கேனர் 2, புஷ் மெசேஜ் - டெக்ஸ்டிங் மற்றும் எஸ்எம்எஸ், எமோஜி வால்பேப்பர், செப்பரேட் டாக் ஸ்கேனர் மற்றும் ஃபிங்கர்பிட் கேம்பாக்ஸ் என்ற செயலிகளில் ஜோக்கர் மால்வேர் கொண்டிருந்ததால், பிளே ஸ்டோரில் நீக்கப்பட்டு இருக்கின்றன.

 

இந்த செயலிகளை ஏற்கனவே இன்ஸ்டால் செய்தவர்கள் இவற்றை அன்-இன்ஸ்டால் செய்வதே சிறந்தது என பிரேடியோ அறிவுறுத்தி உள்ளது.