ஜனாதிபதி மேற்கொண்டுள்ள சில முக்கியமான தீர்மானங்கள்...!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெருந்தோட்டத்துறை சார்ந்த சில முக்கியமான தீர்மானங்களை கடந்த இரண்டு தினங்களில் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நட்டத்தில் இயங்குகின்ற பெருந்தோட்டத்துறை நிறுவனங்களை கையேற்று, அவற்றின் காணிகளை சிறுதேயிலைத்தோட்ட உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதுதொடர்பில் இரத்தினக்கல்வியாபாரிகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி நேற்று கலந்துரையாடியப்போது இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, நட்டத்தில் இயங்குகின்ற பெருந்தோட்டங்களை கையேற்று அவற்றை சிறுதோட்ட உரிமையாளர்களிடம் கையளிப்பது குறித்தும் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உறுரிமையாளர்களாக மாற்றுவது குறித்து மலையகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள் அண்மைக்காலங்களில் பெரிதும் பிரஸ்தாபித்து வருகின்றன.
இந்தநிலையில் தற்போது ஜனாதிபதியின் இந்த தீர்மான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.