நாட்டில் அதிகரித்துள்ள தாதியர் பற்றாக்குறை: வெளியான தகவல்
இலங்கையின் சுகாதார சேவையில் போதுமான செவிலியர்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தைச் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று (14-03-2026) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது 43 ஆயிரத்து 553 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இருப்பினும், இது ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளர்களில் 30 சதவீதமாக இருக்கின்ற போதிலும், சுகாதார சேவைக்குத் தேவையான செவிலியர்களின் எண்ணிக்கை இதுவரை முழுமையடையவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு நாட்டுக்கு இன்னும் பெருமளவிலான செவிலியர்கள் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், செவிலியர் சேவைக்கான ஆட்சேர்ப்பின் போது முறையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் எனவும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.