கப்பல் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் ஒரு கிலோமீற்றர் வரை காபன் கலந்துள்ளதாக தகவல்...!

கப்பல் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் ஒரு கிலோமீற்றர் வரை காபன் கலந்துள்ளதாக தகவல்...!

எம் ரி நிவ் டயமண்ட் கப்பலில் தீப்பரவல் காரணமாக கடலில் கலந்துள்ள காபன் கப்பல் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் சுமார் ஒரு கிலோமீற்றர் வரை படர்ந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு நிறத்தில் குறித்த காபல் திரவம் சமுத்திர நீருடன் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடல்சார் இயற்கை வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கிணங்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினால் மேற்கொள்ளப்படும் ஆய்வினை தொடர்ந்து அது தொடர்பில் சட்ட மா அதிபருக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.