ஹெரோயின் குறைவடைந்து கஞ்சா பாவனை அதிகரித்துள்ளது...!
பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் தேடுதல் நடவடிக்கைகளின் போது பெருந்தொகையான ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனால் ஹெரோயின் போதை பொருள் வர்த்தகர்களிடம் குறித்த போதை பொருள் குறைவடைந்துள்ளதாக காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டில் தற்பொழுது கஞ்சா பாவனை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை தலைமைகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்தார்.