இலங்கையில் சற்று முன்னர் மேலும் மூவருக்கு கொரோனா...!

இலங்கையில் சற்று முன்னர் மேலும் மூவருக்கு கொரோனா...!

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைட்டிலிருந்து நாடு திரும்பிய இருவருக்கும் கந்தக்காடு முகாமில் தங்கியுள்ள கைதி ஒருவருக்கும் சற்று முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3126 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.