ஹானர் பிராண்டின் புது கேமிங் லேப்டாப் வெளியீட்டு தேதி அறிவிப்பு
ஹானர் ஹண்டர் கேமிங் லேப்டாப் செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை ஹானர் தனது அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்ட்டில் தெரிவித்து இருக்கிறது.
இதே நிகழ்வில் கேமிங் லேப்டாப் மட்டுமின்றி இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களையும் ஹானர் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை அந்நிறுவனம் 2020 ஐஎஃப்ஏ நிகழ்வில் அறிமுகம் செய்த ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ மற்றும் ஹானர் வாட்ச் இஎஸ் மாடல்களாக இருக்கும் என தெரிகிறது.
புதிய ஹானர் ஹண்டர் கேமிங் லேப்டாப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கான விளம்பர படத்தின் படி லேப்டாப் ஸ்கிரீனின் பின்பறம் மிளிரும் படியாக லோகோ இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் பேக்லிட் ரக கீபோர்டு வழங்கப்படுகிறது.
ஹானர் ஹண்டர் கேமிங் லேப்டாப் முழு விவரங்கள், விற்பனை தேதி உள்ளிட்டவை செப்டம்பர் 16 ஆம் தேதி நிகழ்வில் அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்பட இருக்கிறது. மேலும் இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.