ஸ்ரீலங்காவில் இருமணி நேரத்தில் 547 பேர் அதிரடியாக கைது! பொலிஸாரின் வேட்டை தொடரும்..

ஸ்ரீலங்காவில் இருமணி நேரத்தில் 547 பேர் அதிரடியாக கைது! பொலிஸாரின் வேட்டை தொடரும்..

பொது இடங்களில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக 547 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று மாலை 6.00 முதல் இரவு 8.00 மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் அதிகமானோர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.