எம்.டி.நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் குறித்த விசேட கலந்துரையாடல்
எம்.டி.நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவசரநிலை முகாமைத்துவ குழுவின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
குறித்த கப்பலில் நேற்று மாலை மீண்டும் தீ ஏற்பட்டது.
எனினும் நேற்றைய தினத்தைவிட தற்போது தீப்பிழம்புகள் மற்றும் அதில் இருந்து வெளியேறும் புகை ஓரளவு குறைந்துள்ளதாக கடற்படை ஊடாகப் பேச்சாளர் கெப்டன் இந்திகடி சில்வா தொடர்வித்துள்ளார்.
அதேநேரம் சர்வதேச எண்ணெய் கப்பல் உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அரைழப்பின்பேரில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
நாட்டின் அதிகாரிகள் மட்டத்தின் பல்வேறுத் தரப்பினருக்கும், இலங்கை வந்துள்ள சர்வதேச எண்ணெய் கப்பல் உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இடையில் இணையத்தளம் ஊடாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருதாக அந்த அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.