
தொடர்ந்து எரியும் எண்ணெய் கப்பல்: தீயை அணைப்பதில் சிக்கல் (காணொளி)
MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீயை முற்றிலுமாக அணைக்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த கப்பல் நேற்று இலங்கை கரையிலிருந்து 40 கடல் மைல்தொலைவில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கப்பலில் ஏற்பட்டுள்ள தீ தற்போது பாரிய அளவில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வேகத்தில் தீப்பரவினால் வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.
கப்பல் வெடித்தால் இலங்கை கடற்பரப்பிற்கு பாரிய பாதிப்புகுள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடற்படையினர் 2000 கிலோ கிராமுக்கு அதிகமான திரவ வகை ஒன்றை விமான மூலம் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் நேரலைக் காணொளி இதோ...