புது அம்சங்களுடன் அப்டேட் ஆக இருக்கும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
வாட்ஸ்அப்
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் விரைவில் பல்வேறு புது அம்சங்களை பெற இருக்கிறது. வெகேஷன் மோட், மேம்பட்ட புது யுஐ மற்றும் பல்வேறு அம்சங்கள் வாட்ஸ்அப் செயலியில் அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை பல லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புதுப்புது அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், க்யூஆர் கோட் மற்றும் பல அம்சங்கள் வழங்கப்பட்டன.
அந்த வரிசையில் வாட்ஸ்அப் செயலியில் விரைவில் வெகேஷன் மோட் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஆர்ச்சிவ் செய்த சாட் பாக்ஸ்களில் புது மெசேஜ்கள் வந்தாலும் அவற்றை மியூட் செய்ய முடியும். இத்துடன் கால் ஸ்கிரீன் யுஐ மாற்றம் செய்ய்பட இருக்கிறது.
இதேபோன்று புதிய வாட்ஸ்அப் வால்பேப்பர்கள் வழங்கப்பட இருக்கின்றன. இவற்றை பயனர்கள் சாட் பாக்ஸ் பேக்கிரவுண்டாக செட் செய்து கொள்ள முடியும். இதை கொண்டு பயனர்கள் வெவ்வேறு சாட் பாக்ஸ்களில் தனித்தனி பேக்கிரவுண்டுகளை செட் செய்து கொள்ளலாம்.
இவற்றுடன் வாட்ஸ்அப் செயலியின் யுசர் இன்டர்ஃபேஸ் முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புது டிஸ்ப்ளே கொண்டு பயனர்கள் தங்களின் ஸ்டோரேஜை எளிதில் மாற்றியமைத்து, தேவையற்ற ஃபைல்களை அவ்வப்போது அழிக்க முடியும்.