ஐஸ் ரக போதை பொருளுடன் நால்வர் கைது...!

ஐஸ் ரக போதை பொருளுடன் நால்வர் கைது...!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதை பொருட்களை தம்வசம் வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்

காவல் துறை விசேட அதிரடி படையினர் இந்த தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

திஸ்ஸமஹராம, பன்னேகமுவ, மற்றும் தெபரவெவ ஆகிய பகுதிகளிலேயே தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 696 கிராம் ஐஸ் ரக போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.