ஆப்பிள் நிறுவனம் 7.5 கோடி 5ஜி ஐபோன்களை உருவாக்கி வருவதாக தகவல்
ஆப்பிள் நிறுவனம் 7.5 கோடி 5ஜி ஐபோன் யூனிட்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு விற்பனை செய்ய சுமார் 7.5 கோடி 5ஜி ஐபோன் யூனிட்களை உற்பத்தி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த எண்ணிக்கையை 8 கோடியாக அதிகரிக்கவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
5ஜி ஐபோன்கள் தவிர புதிய ஐபேட் ஏர், ஆப்பிள் வாட்ச் வெர்ஷன்களும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய ஐபேட் ஏர் மாடல் ஐபேட் ப்ரோ போன்ற வடிவமைப்பில் எட்ஜ்-டு-எட்ஜ் ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இவைதவிர ஒவர் இயர் ஹெட்போன்கள், சிறிய அளவிலான ஹோம்பாட் ஸ்பீக்கர் உள்ளிட்டவைகளையும் ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் மற்றும் அதன் உற்பத்தியாளர்கள் புது சாதனங்களின் உற்பத்தி பணிகளை வேகப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் 12 விலை ஐபோன் 11 போன்றே நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் பேக்கேஜிங் ரென்டர்களின் படி புதிய ஐபோனிற்கான லைட்னிங் கேபிள் மற்றும் மேனுவல் புக்லெட் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் சார்ஜர் மற்றும் இயர்பாட்ஸ் வைப்பதற்கான இடம் நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புதிய ஐபோன் பாக்ஸ் மெல்லியதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின்படி புதிய ஐபோன் 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.