பெற்றோரை இழந்த இரட்டையர்களுக்கு பொலிஸார் கொடுத்த இன்ப அதிர்ச்சி! குவியும் வாழ்த்துக்கள்

பெற்றோரை இழந்த இரட்டையர்களுக்கு பொலிஸார் கொடுத்த இன்ப அதிர்ச்சி! குவியும் வாழ்த்துக்கள்

பொற்றோரை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்த 8 வயது இரட்டையர்களை அநாதை இல்லத்திற்கு அனுப்ப நானு ஓயா பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அந்த சிறுவர்களின் பிறந்த நாள் என்பதை கருத்தில் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பின்னர் அனைவருடன் இணைந்து இன்ஸ்பெக்டர் சுகத் விஜேசுந்தர பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார்.

யாருமற்ற ஏக்கம் உருவாக்காமல் சிறார்களை குதூகலப்படுத்தியுள்ளனர்.

பொலிஸாரிலும் நல்ல குணங்களைக் கொண்ட நல்ல மனிதர்கள் இல்லாமல் இல்லை. இந்த சம்பவம் மிகவும் பெருமை கொள்ளும் விடயமாகும். இனால் குறித்த சிறுவர்கள் இருவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.