அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் செயற்படுவது அவசியம்- அமைச்சர் விமல் வீரவங்ச

அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் செயற்படுவது அவசியம்- அமைச்சர் விமல் வீரவங்ச

அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பில் இனவாதிகள் அல்லது பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு சட்டங்களை உருவாக்க முடியாது.

அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நிலையான தன்மையை இல்லாது செய்வதற்கு எதிர்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் மக்கள் பாதுகாப்பின்றி இருப்பதாக இரா.சம்பந்தன் அமெரிக்க தூதுவரிடம் கூறுகின்றார்.

அவர்களை பாதுகாக்குமாறு கோரியுள்ளார்.

எனினும் தமிழ் மக்கள் கடந்த நான்கரை ஆண்டு காலப்பகுதியிலேயே பாதுகாப்பின்றி இருந்தனர்.

வடக்கில்  ஆவா குழு என ஒரு குழு காணப்பட்ட போதிலும் தற்போது அவ்வாறு எதுவும் இல்லை.

ஒவ்வொரு நாடுகளின் எண்ணங்களுக்கு ஏற்ப செயற்படுவதற்காக தற்போதைய நிலையான அதிகாரம் வழங்கப்படவில்லை.

எனவே, புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.