சபாநாயகரிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தி

சபாநாயகரிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தி

கோப்  எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையினை அதிகரித்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரியுள்ளது,

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இதனை குறிப்பிட்டார்.

இந்த முறை  கோப் எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 14 உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 8 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர் தரப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ கோரிக்கை எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முன்வைக்கப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இதனை குறிப்பிட்டார்.