தான் பெற்ற மகளையே சீரழித்த தந்தை கைது

தான் பெற்ற மகளையே சீரழித்த தந்தை கைது

தான் பெற்ற மகளையே பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் சியம்பலாண்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 15 வயது மகளான சிறுமியே பாதிக்கப்பட்டவராவார்.

தனது மகளை குறித்த தந்தை பலமுறை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாயார் வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளார்.

மீட்கப்பட்ட சிறுமி மொனராகலை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட தந்தை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.