தனிமைப்படுத்தல் நிலையத்தில் மது விருந்து! இறுதியில் நடந்த விபரீதம்

தனிமைப்படுத்தல் நிலையத்தில் மது விருந்து! இறுதியில் நடந்த விபரீதம்

இராஜகிரிய ஆயுர்வேத மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஜப்பானில் இருந்து நாட்டிற்கு வந்த இரண்டு குழுக்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த குழுவினர் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மதுவை சேர்ந்து அருந்தியுள்ளனர். அதன் பின்னர் இந்த மோதல் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த மோதலில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மோசமாக இல்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.