துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி..!

துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி..!

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான சமயங் என்பவரின் பிரதான துப்பாக்கிதாரியான இந்ரா என அறியப்படும் வஜித குமார என்பவர், தப்பிச்செல்ல முயற்சித்தபோது நவகமுவயில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.