இன்ஸ்டாகிராமில் Messenger Room வசதியை பெறுவது எப்படி?

இன்ஸ்டாகிராமில் Messenger Room வசதியை பெறுவது எப்படி?

பேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் சேவையில் Messenger Room எனும் வசதியினை அறிமுகம் செய்திருந்தது.

இதன் மூலம் 50 பயனர்கள் வரையில் வீடியோ சட்டில் ஈடுபட முடியும்.

அதன் பின்னர் வாட்ஸ் ஆப்பில் இச் சேவையினை இணைத்து பயன்படுத்தக்கூடிய வசதியையும் அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் மற்றுமொரு சேவையான இன்ஸ்டாகிராமிலும் Messenger Room வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் இவ் வசதியை பெறுவதற்கு Direct Messages எனும் பகுதிக்கு முதலில் செல்ல வேண்டும்.

அங்கு Video Call என்பதை கிளிக் செய்து Create a Room என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் நண்பர்களை Invite செய்து அவர்கள் இணையும் வரைக்கும் காத்திருக்க வேண்டும்.

நண்பர்கள் இணைந்த பின்னர் வீடியோ சட்டில் ஈடுபட முடியும்.