ஹெரோ தோட்ட மக்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்...!
பூண்டுலோயா ஹெரோ தோட்டத்தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்
பூண்டுலோயா ஹெரோ தோட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவர் அண்மையில் கல்கிஸ்ஸை கடற்கரையில் நீராடிய போது நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தை கேள்வியுற்ற தினம் முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்ற தினம் வரை தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாது, அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனால் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் தோட்ட நிர்வாகம், வெளியில் இருந்து ஆட்களை அழைத்துவந்து கொழுந்து பறித்துள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தங்களுக்கு போதிய நியாயம் கிடைக்கும் வரை தொழிலுக்கு திரும்ப போவில்லை என தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பில் எமது செய்தி சேவை பூண்டுலோயா தோட்ட முகாமையாளர் அலுவலகத்தை பல தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை