ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட “குடு ரங்க”

ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட “குடு ரங்க”

பாதாள உலக குழு உறுப்பினர் ´பொடி லெசி´யுடன் தொடர்புடைய சகா ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரை பலபிடிய - அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரிடமிருந்து ரி56 ரக துப்பாக்கி, குறிபார்த்து சுடும் துப்பாக்கி 2, 98 ரவைகள் உள்ளிட்ட சில ஆயுதங்களும் இவருடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள உலக குழு உறுப்பினர் பொடி லெசியின் பிரதான உதவியாளரான “குடு ரங்க” என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.