
மைத்ரிபால சிறிசேனவுக்கு பதவி..: தயாசிறி ஜயசேகரவின் கருத்து
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பதவி ஒன்று பெற்று கொடுப்பது தொடர்பில் ஆளும் கட்சியின் தரப்பினருடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2 ஆம் திகதி கூடவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 69 ஆவது ஆண்டு பூர்த்தி தொடர்பான கலந்துரையாடல் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொவிட்-19 காரணமாக இந்த முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு பூர்த்தி நிகழ்வை பெல்லங்வில ரஜமஹாவிகாரையில் மையப்படுத்தில் மத வழிபாடுகள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.
இது குறித்த ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.