இன்றைய தினம் 308 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர்...!

இன்றைய தினம் 308 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர்...!

முப்படையினரால் முன்னெடுத்து செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இன்றைய தினம் 308 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கொவிட்19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதுவரையில் 33 ஆயிரத்து 695 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 69 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 7 ஆயிரத்து 122 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 110 பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, இதுவரையில் இரண்டு இலட்சத்து 19 ஆயிரத்து 162 பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்கொவிட்19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 986 ஆக உள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 830 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, 144 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.