கட்சி நிதியில் பங்களிப்பு செய்யாத கரு - எழுந்தது புதிய சர்ச்சை

கட்சி நிதியில் பங்களிப்பு செய்யாத கரு - எழுந்தது புதிய சர்ச்சை

கரு ஜெயசூரியா நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்பட்டதிலிருந்து கட்சி நிதியில் பங்களிப்பு செய்யவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் எம்.பி. சந்தித் சமரசிங்க கூறுகிறார்

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் உள்ள அனைவரும் கட்சி நிதிக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.

இந்த நிலையிலேயே கரு ஜெயசூரியா கட்சி நிதியில் பங்களிப்பு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுகின்றது.

இவ்வாறு இருக்கும் போது ஜெயசூரியாவை கட்சியின் வாழ்நாள் உறுப்பினராக சித்தரிக்கும் முயற்சிகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என சந்தித் ஒரு அறிக்கையில் கூறினார்

ஆகஸ்ட் 24 ம் திகதி கரு ஜெயசூரியாவின் அறிக்கையில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என்று எங்கும் குறிப்பிடவில்லை," என்று சமரசிங்க கூறினார்.