இரண்டாம் நாள் விவாதம்..
அடுத்த நான்கு மாதங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குறித்த இடைக்கால கணக்கறிக்கையை நேற்று காலை சபையில் முன்வைத்தார்.
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், அதாவுல்லா, பைசல் காசிம், செல்வராசா கஜேந்திரன், மருதபாண்டி ராமேஸ்வரன், ஏ.அரவிந்த்குமார், எம்.எச்.எம் ஹாரிஸ், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.