7 வருடங்களுக்குப் பின் இலங்கையில் கைது செய்யப்பட்ட முக்கிய புள்ளி

7 வருடங்களுக்குப் பின் இலங்கையில் கைது செய்யப்பட்ட முக்கிய புள்ளி

3 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் ஒரு தொகை பணத்துடன் பாதாள உலக குழுவின் தலைவரான அங்கொட லொக்காவின் நண்பர் ஊருகொடவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதான சதுர சஞ்சீவ அல்லது ‘கெசல்வத்த கிருஷாந்த’ என்ற சந்தேகநபர் ஏழு ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறித்த நபர் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்து நிலையில் ஏழு வருடங்களுக்குப் பின் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்ட போது 611,550 ரொக்கம் மற்றும் இரண்டு காசோலை புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையில் சந்தேகநபர் கடவதையில் ஒரு சொகுசு வீடு வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதற்கு முன்பு அங்கொட லொக்காவின் நண்பர்களுள் ஒருவரை 42 கிலோகிராம் ஹெரோயின், மூன்று டி - 56 ரக துப்பாக்கிகள், 170 சுற்று வெடிமருந்துகள் மற்றும் 9 மி.மீ கைத்துப்பாக்கி ஆகியவற்றுடன் பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை கொழும்பு மெனிங் சந்தையில் ஹெராயின் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை பெட்டா பொலிசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.