காட்டு யானை தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதியின் விசேட திட்டம்.!

காட்டு யானை தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதியின் விசேட திட்டம்.!

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுல் ஒன்றான காட்டு யானை தாக்குதலுக்கு எதிர்வரும் இரண்டு அண்டுக்குள் நிரந்தரமான தீர்வு ஒன்றை பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு,யானை வேலிகள் மற்றும் அகழிகைகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காட்டு யானை தாக்குதலால் பாதிக்கப்படும் மக்களுக்கான ஓர் தீர்வை விரைவில் பெற்றுத்தருவதுடன், இந்த பிரச்சினையை வெகு விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டியது எனது கடமை எனவும் அவர் மேலும் சுட்டிகாட்டியுள்ளார்.

மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைக்கு கடந்த 40 ஆண்டுகளாக முறையான தீர்வு ஒன்று பெற்றுத்தரப்படவில்லை என்பதும் ஜனாதிபதியின் கருத்தாக அமைந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் இந்த தாக்குதலால் சுமார் 470 பேர் வரை உயிரிழந்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இந்த தாக்குதலால் 62 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்த்கது.