அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – குடியரசு கட்சி வேட்பாளராக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – குடியரசு கட்சி வேட்பாளராக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரை அக்கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜோ பிடனை ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயக கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில் இன்று குடியரசுக் கட்சியின் தேசியக் குழு கூட்டம் இடம்பெற்றது. இதில் இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அத்தோடு, துணை ஜனாதிபதி வேட்பாளராக மைக் பென்ஸ் போட்டியிடவுள்ளதாக குடியரசுக் கட்சியின் தேசிய குழு தலைவர் ரோஜாவ் மெக்டேனியல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.