தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்று சுழற்சி- அடுத்து வரும் சில நாட்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்று சுழற்சி- அடுத்து வரும் சில நாட்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்று சுழற்சிஅடுத்து வரும் நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 02.01.2026 அன்று இது தாழமுக்கமாக மாற்றம் பெறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் மற்றும் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

இலங்கையின் கிழக்கு தென்கிழக்கு திசையில், இலங்கையின் கரையோரமாக நிலவி பின் இலங்கைக்கு தெற்காக மேற்கு நோக்கி நகர்ந்து குமரிக்கடலைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக நேற்றையதினம்(28) கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்க தொடங்கியுள்ளது.

இன்றும்(29.12.2025) வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்று சுழற்சி- அடுத்து வரும் சில நாட்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Cyclonic System Moving Towards Sri Lanka Weather

நாளையதினம் (30.12. 2025) முதல் வடக்கு, கிழக்கு, வட மத்திய, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மழை பரவலடையும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 31.12.2025 முதல் 04.01.2026 வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா வட மத்திய, மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்நாட்களில் குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பதுளை, நுவரெலியா, காலி,மாத்தறை கண்டி மட்டக்களப்பு, அம்பாறை, மாவட்டங்களின் சில இடங்களில் 31.12.2025, மற்றும் எதிர்வரும் ஜனவரி 01, 02, 03 ம் திகதிகளில் 150 மி.மீ. க்கு மேற்பட்ட மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.