குடும்பஸ்தருக்கு வீட்டு உரிமையாளர் நடத்திய கொடூரம் ; பறிபோன உயிர்
அயகம - சமருகம பகுதியில், தாக்குதலால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் நேற்று (27) ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அயகம, சமருகம பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் கடந்த 26ஆம் திகதி மாலை, வீட்டின் உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டின் உரிமையாளரால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயது, சந்தேகநபர் அயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.