
எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்..
மினுவாங்கொடை பகுதியில் வாகனம் ஒன்றில் இருந்து டி-56 ரக துப்பாக்கி மற்றும் 04ரவைகளை வெளியே வீசிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.