வெல்லே சாரங்க உள்ளிட்ட 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெல்லே சாரங்க உள்ளிட்ட 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

பாதாள உலக குழுவின் துப்பாக்கிதாரியான  வெல்லே சாரங்க  உள்ளிட்ட மேலும் 3 பேர் கொழும்பு குற்றப் பிரிவினரால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் டுபாய் நோக்கி செல்வதற்கு தயாராக இருந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் ஒருவர் அங்கொட லொக்காவின் உதவியாளராக செயற்பட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், கதலுவ லியனகே புத்திக சஞ்சீவ என்ற மற்றுமொரு சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதோடு, இவரிடம் இருந்த 29 இலட்சம் ரூபாவும் இதன்போது கைப்பற்ப்பட்டுள்ளது.

அத்தோடு, காப்தீன் மொஹமட் சுபீர் என்ற நபரே அங்கொட லொக்காவின் உதவியாளராவார். இவர் ஹங்வெல்ல பிரதேசத்தில் அரச வங்கியொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வெல்லே சாரங்கவுடன் கைதான மற்றைய நபர் ரணசிங்க ஆராச்சிகே இஷார லக்மால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் நீண்ட காலமாக கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.