இன்று தங்கம் விலையில் சரிவு: மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (05) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்க விலை
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று வீழ்ச்சி பதிவு செய்துள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,441.66 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் -35.60 டொலர்கள் (-0.80%) வீழ்ச்சியாகும்