எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்தை நடத்த இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தது நேபாள அரசு!

எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்தை நடத்த இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தது நேபாள அரசு!

எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இந்தியா பதில் தரும் என நம்புவதாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியாவாளி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியாவாளி ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள லிம்பியதுரா,  காலாபாணி,  லிபுலேக் ஆகிய பகுதிகளுக்கு நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த பகுதிகள்  உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என இந்தியா அறிவித்துள்ளது.

இதனிடையே இந்த மூன்று பகுதிகளையும் சேர்ந்து நாட்டின் புதிய வரைபடத்தை தயார் செய்து நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் புதிய வரைபடம் தொடர்பான அரசமைப்பு சட்டத்திருத்த மூலம்  நேபாள நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அந்நாட்டின் எதிர்கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன.

நேபாளத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.