
ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பிணையில் விடுதலை!
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் 5ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 6 இலட்சத்து 11 ஆயிரத்து 64 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி கடந்த 24 மணிநேரத்தில், 6295 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 4 இலட்சத்து 59 ஆயிரத்து 771 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2130 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 11 கோடியே 39 இலட்சத்து 65 ஆயிரத்து 139 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.