மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை

கடந்த 24 மணிநேரத்தில் மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் 377 பேர் கைது செய்துள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதில் 170 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரியை கடுவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.