கொழும்பின் கடுமையான எதிர்ப்பு! இந்தியா வகுத்த திட்டம்- மோடி வெளியிட்டுள்ள உடனடி அறிவிப்பு

கொழும்பின் கடுமையான எதிர்ப்பு! இந்தியா வகுத்த திட்டம்- மோடி வெளியிட்டுள்ள உடனடி அறிவிப்பு

கொழும்பு துறைமுகத்துக்கு மாற்றாக வங்காள விரிகுடாவில் உள்ள கிரேட் நிக்கோபார் தீவில் புதிய இடமாற்றத் துறைமுகத்தை(ட்ரான்ஸிப்மென்ட்) உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

நிக்கோபார் தீவின் மூலோபாய முக்கியத்துவத்தை கணக்கில் கொண்டு இந்த திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையிலான முக்கிய கப்பல் தடமான மலாக்கா ஜலசந்தியின் வாயில் அமைந்துள்ள இந்தியாவின் நிக்கோபார் தீவுகளில் தெற்கே மற்றும் மிகப்பெரிய நிக்கோபார் தீவில் இந்த முன்மொழியப்பட்ட இடமாற்றத் துறைமுகம் நிறுவப்படும்.

இது தற்போது பிராந்தியத்தின் முக்கிய இடமாற்ற மையங்களாக இருக்கும் கொழும்பு துறைமுகத்திற்கும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் போர்ட் கிளாங் இடமாற்றத் துறைமுகங்களுக்கும் மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் உரிமையை சீனா கையகப்படுத்திய பின்னர், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ஒரு இடமாற்ற துறைமுகமாகப் பாதுகாப்பதில் இந்தியா ஆர்வமாக இருந்தது.

எனினும் இது கொழும்பு துறைமுகத்தின் தொழிற்சங்கங்களால் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள நிலையிலேயே இந்தியாவின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளான ஒரு பகுதியில் இந்தியாவின் முன்மொழியப்பட்ட இடமாற்றத் துறைமுகம் அமைந்துள்ளது என்பதை இடவியல் வரைபடங்கள் காட்டுகின்றன.