அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் : களமிறங்கும் மத்தியக் குழு!

அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் : களமிறங்கும் மத்தியக் குழு!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 50 மாவட்டங்களில் மத்தியக் குழு களம் இறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று (புதன்கிழமை) காலை நிலைவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் நகராட்சிகளில் கொரோனாவின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக உயர் மட்ட மத்தியக்குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த குழுக்கள் பரிசோதனைகள், மில்லியன் மக்களுக்கு குறைந்த சோதனை, அடுத்த இரண்டு மாதங்களில் திறன் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து, படுக்கை வசதி குறைபாடு, உயரும் பலி எண்ணிக்கையின் சதவீதம், உறுதிப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இரட்டிப்பு ஆகும் சதவீதம் உயர்தல், திடீரென சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற சாவல்களை திறம்பட எதிர்கொள்ள இந்த குழு உதவி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.