இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா...!

இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா...!

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் 64 ஆயிரத்து 553 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் ஆயிரத்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 61 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளதோடு 48 ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 10 நாட்களாக இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறதியாகின்றவர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படுகின்றனர்.

எவ்வாறாயினும் இந்தியாவில் கொவிட்-19 தொற்றறுதியான 17 லட்சத்து 51 ஆயிரத்து 555 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை அவுஸ்ரேலியாவில் கொவிட்-19 தாக்கம் குறைவடைந்து வருவதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறிப்பாக மெல்போர்ன் பகுதியில் தொடர்ந்து முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழழைம 400 க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் நேற்று 290 பேருக்கு மாத்திரம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய அவுஸ்ரேலியாவில் இதுவரையில் 22 ஆயிரத்து 741 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு 375 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 68 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது

சர்வதேச ரீதியில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 446 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியான ஒரு கோடியே 39 லட்சத்து 20 ஆயிரத்து 144 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.