ஈரான் ஒருபோதும் அணுஆயுதம் பெற முடியாது: பிரச்சாரப் பேரணியில் ட்ரம்ப் முழக்கம்

ஈரான் ஒருபோதும் அணுஆயுதம் பெற முடியாது: பிரச்சாரப் பேரணியில் ட்ரம்ப் முழக்கம்

ஈரான் அணுஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுருத்தியுள்ளார்.

அமெரிக்காவின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளால் தெஹ்ரானின் தலைமைத்துவமும் தற்காப்புத் திறன்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோர்ஜியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

 

போர்க் கப்பல்கள் 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த ட்ரம்ப், யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவது ? ஈரானியத் தலைவர்களைக் கொல்வதை நான் நிறுத்த வேண்டியுள்ளது.

ஈரான் ஒருபோதும் அணுஆயுதம் பெற முடியாது: பிரச்சாரப் பேரணியில் ட்ரம்ப் முழக்கம் | Severe Lightning Amber Alert For East Lanka

ஏனெனில், நாம் யாருடன் தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை நான் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.

ஈரானிடம் தற்போது விமானங்கள், போர்க் கப்பல்கள் என எதுவுமே இல்லை, அந்நாட்டின் முதல் மற்றும் இரண்டாம் நிலை உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்” என தெரிவித்துள்ளார்.

 

மோசமான ஒப்பந்தங்கள்

அத்தோடு, 2018 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் (JCPOA) இருந்து அமெரிக்கா வெளியேறிய தீர்மானத்தை ட்ரம்ப் நியாயப்படுத்தினார்.

இந்தநிலையில் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதற்கு வழிவகுத்த வரலாற்றின் மிக மோசமான ஒப்பந்தங்களில் ஒன்றான பராக் ஹுசைன் ஒபாமாவின் ஒப்பந்தத்தை நல்வாய்ப்பாக சரியான நேரத்தில் நான் ரத்து செய்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஒருபோதும் அணுஆயுதம் பெற முடியாது: பிரச்சாரப் பேரணியில் ட்ரம்ப் முழக்கம் | Severe Lightning Amber Alert For East Lanka

2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேஷன் மிட்நைட் ஹேமர் (Operation Midnight Hammer) மற்றும் ஒப்பரேஷன் எபிக் ஃபியூரி (Operation Epic Fury) ஆகிய இராணுவ நடவடிக்கைகளின் மூலம் ஈரானின் யூரேனியம் செறிவூட்டல் திறனை அமெரிக்கா முற்றாக அழித்துவிட்டது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இராணுவ ரீதியாகவும், நிதி ரீதியாகவும், ஏனைய அனைத்து வழிகளிலும் ஈரானை நாம் வீழ்த்திவிட்டோம் எனவும் அவர்கள் இனி எப்போதும் அணுஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.