இடைத்தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது பாரிய குண்டுமழை : ட்ரம்பின் பச்சைக்கொடிக்கு காத்திருக்கும் அமெரிக்க இராணுவம்

இடைத்தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது பாரிய குண்டுமழை : ட்ரம்பின் பச்சைக்கொடிக்கு காத்திருக்கும் அமெரிக்க இராணுவம்

 நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தல் நிறைவடைந்ததும் ஈரான் மீது மீண்டும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு அமெரிக்க இராணுவம் தயாராகி வருவதாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இருவரை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்திகளின்படி, மத்திய கிழக்கில் போதிய அளவிலான அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் குவிக்கப்பட்டுள்ளன.

 "மிகப்பெரிய அளவிலான" தாக்குதல்

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து பச்சைக்கொடி கிடைத்தால், அடுத்த 4 நாட்களுக்குள் ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையைத் தொடங்கும் வகையில் படைகள் தயாராக உள்ளன.

இடைத்தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது பாரிய குண்டுமழை : ட்ரம்பின் பச்சைக்கொடிக்கு காத்திருக்கும் அமெரிக்க இராணுவம் | Us Renewed Strikes On Iran After Midterm Elections

இதுவரை ஈரான் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தற்காலிகத் தாக்குதல்களை போலல்லாமல், இந்த முறை "மிகப்பெரிய அளவிலான" தீவிரத் தாக்குதலை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாரிய சரிவைச் சந்தித்துள்ள ட்ரம்பின் ஆதரவுத்தளம்

ஈரான் உடனான மோதல், அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவு விகிதம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

இடைத்தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது பாரிய குண்டுமழை : ட்ரம்பின் பச்சைக்கொடிக்கு காத்திருக்கும் அமெரிக்க இராணுவம் | Us Renewed Strikes On Iran After Midterm Elections

ரொய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக் கணிப்பின்படி, ட்ரம்பின் ஆதரவு நிலை 32 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இருப்பினும், டெக்சாஸின் லுப்பாக் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில் பேசிய ட்ரம்ப், ஈரான் போர் "தான் விரும்பும் நேரத்தில் மட்டுமே முடிவுக்கு வரும்" எனக் கூறி இதைப் பொருட்படுத்தாமல் பேசியுள்ளார்.

 

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  தொடர் அழுத்தம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்த ட்ரம்பிற்கு தொடர் அழுத்தம் கொடுத்து வருகிறார். இருப்பினும், இடைத்தேர்தல் முடியும் வரை தாக்குதலைத் தள்ளிப்போடுமாறு வோஷிங்டன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இடைத்தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது பாரிய குண்டுமழை : ட்ரம்பின் பச்சைக்கொடிக்கு காத்திருக்கும் அமெரிக்க இராணுவம் | Us Renewed Strikes On Iran After Midterm Elections

 

மத்திய கிழக்கு மோதல்களால் அமெரிக்காவிற்கு இதுவரை $47 பில்லியன்களுக்கும் அதிகமாக செலவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.