வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தேர்தலில் வாக்களித்தல் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தேர்தலில் வாக்களிப்பதைச் சாத்தியமாக்குவதற்கான சட்டத் திருத்தங்கள் குறித்த மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் வாக்குரிமை குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் இடையே இந்தக் கூட்டம் நேற்று (27) இடம்பெற்றது.
இதன்போது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் தெரிவித்தார்.
வாக்களிக்கும் முறை
வெளிவிவகார அமைச்சின் ஒத்துழைப்புடன், அடுத்த ஆண்டு முதல் இதற்கான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் வாக்களிக்கும் முறையைத் தீர்மானிப்பது குறித்தும் தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
முன்கூட்டியே வாக்களித்தல், தபால் மூலம் வாக்களித்தல் அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான முறை என, எது சிறந்தது என்பது குறித்து முறையாக முன்மொழியப்பட்டு, உரிய காலத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.