யாழில் தண்டவாளத்தில் படுத்து பாடல் கேட்டவர் கை, கால்களை இழந்த விபரீதம்
யாழ்ப்பாணம், இணுவில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (03) இரவு ரயிலுடன் மோதுண்டதில் தனது இரண்டு கால்களையும் ஒரு கையையும் இழந்துள்ளார்.
தனது வீட்டிற்கு முன்பாக உள்ள ரயில் தண்டவாளத்தில் ஹெட் செட் அணிந்து பாடல் கேட்டவாறு படுத்திருந்த வேளையிலேயே, அவ்வழியாக வந்த ரயிலுடன் அவர் மோதுண்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்து கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்டெடுக்கப்பட்ட அவர், உடனடியாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.