யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் இன்றும் மின்தடை : வெளியான அறிவிப்பு

யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் இன்றும் மின்தடை : வெளியான அறிவிப்பு

வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் இன்றும் (03) மின்சார விநியோகம் தடைப்படும் என வடமாகாண மின்சார சபை அறிவித்துள்ளது.

வவுனியா - மன்னார் 220 கிலோவோல்ட் மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக இவ்வாறு மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்படவுள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இன்று (03) நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை மின் விநியோகம் முழுமையாகத் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மின் விநியோகம் மீள வழங்கப்படும்

இந்தநிலையில், பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் இன்றும் மின்தடை : வெளியான அறிவிப்பு | Today Power Cut In 4 Districts Of Sri Lanka

 

மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் பணிகள் நிறைவடைந்ததும் மின் விநியோகம் உடனடியாக மீள வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதிகளில் நேற்று (03) நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.