திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள்

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள்

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

திருச்சி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏற்கனவே விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த விமான சேவையானது இரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை, இண்டிகோ நிறுவனம் சார்பில் நேற்று (01) முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. 

இதில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுமார் 45 முதல் 50 நிமிடங்களிலேயே யாழ்ப்பாணத்தை சென்றடையலாம். 

வாரத்தில செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் இந்த விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. 

நேற்று யாழ்பாணத்தில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 45 பயணிகளும், திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற விமானத்தில் 44 பயணிகளும் பயணம் மேற்கொண்டனர். 

யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.