நிறைவு பெற்றது செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணி! சமர்பிக்கப்படவுள்ள அறிக்கை
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை இறுதிநாள் அகழ்வு பணிகள் நடைபெற்றன.
செம்மணியில் முதலாம் கட்ட அகழ்வு பணிக்காக 09 நாட்களும் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிக்காக 54 நாட்களும் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக 56 நாட்களும் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டு, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் இதுவரை செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளின் போது, 583 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவை அனைத்தும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
விசேட அறிக்கை
இதன்படி, 3 ஆம் கட்ட அகழ்வுப்பணிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அது குறித்து பேராசிரியர் ராஜ் சோமதேவவால் விசேட அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகத்திக்கிடையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். கிடைக்கப்பெற்ற பிற சான்றுப்பொருட்களை அடிப்படியாக வைத்து இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.