தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று ஒரு சவரன் எவ்வளவு?

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று ஒரு சவரன் எவ்வளவு?

today Gold and silver price :ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக மாற்றங்கள் பதிவாகி வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

நேற்று (ஆகஸ்ட் 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,270-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.1,14,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று ஒரு சவரன் எவ்வளவு? | August 18Th 2026 Gold And Silver Price In Chennai

இன்றைய நிலவரம் 

இந்நிலையில், இன்று 22 காரட் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.14,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.160 அதிகரித்து ரூ.1,14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று ஒரு சவரன் எவ்வளவு? | August 18Th 2026 Gold And Silver Price In Chennai

18 காரட் தங்கத்தின் விலை 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு காணப்படுகிறது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.20 அதிகரித்து ரூ.12,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் 18 காரட் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.96,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று ஒரு சவரன் எவ்வளவு? | August 18Th 2026 Gold And Silver Price In Chennai

வெள்ளி விலையில் மாற்றமில்லை தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.