350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய இடதுகை பந்துவீச்சாளர் ஜடேஜா - டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை!
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 350ஆவது விக்கெட்டை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் 311 விக்கெட்டுகளுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.